எனினும் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி இத்தரவுகள் சேமிக்கப்படும்போது பொதுவாக FAT32, NTFS போன்ற இரண்டுவகையான கோப்பு வகைகள் காணப்படுகின்றன.
எனவே தேவைக்கு ஏற்ப FAT32 கோப்புக்களிலுருந்து NTFS ற்கு மாற்றம் செய்துகொள்ள முடியும். இதன்போது சில சந்தர்ப்பங்களில் தரவுகளை இழக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே தரவு இழப்பை தவிர்த்து FAT32 கோப்புக்களிலுருந்து NTFS ற்கு மாற்றுவதற்கு கீழ்வரும் முறைகளை பின்பற்றுக.
1. முதலில் மாற்றவேண்டிய கோப்புக்கள் உள்ள வன்றட்டின் பெயரை குறித்துக்கொள்க.
2. படத்தில் காட்டியவாறு CMD ஐ Run As Administratorல் செயற்படுத்தவும்.
3.தற்போது ஏதாவது கோளாறுகள் உள்ளனவா என “chkdsk G: /f “ கட்டளையை பயன்படுத்தவும்.(இங்கு G என்பது வன்றட்டின் பகுதியாகும்
4.தொடர்ந்து “Convert G: /FS:NTFS”எனும் கட்டளையை செயற்படுத்துக.
5.கோப்புக்ள் முற்றாக மாற்றப்பட்டதும் command promptல் Conversion Complete என்றவாறு தோன்றும். இதிலிருந்து உங்கள் கோப்புக்கள் FAT32 இலிருந்து NTFS ற்கு மாற்றப்பட்டுவிட்டது.
No comments:
Post a Comment