2012/03/16

ஏறு முக இலக்கங்கள்

1 = ஒன்று -one


10 = பத்து -ten


100 = நூறு -hundred


1000 = ஆயிரம் -thousand


10000 = பத்தாயிரம் -ten thousand


100000 = நூறாயிரம் -hundred thousand


1000000 = பத்துநூறாயிரம் - one million


10000000 = கோடி -ten million


100000000 = அற்புதம் -hundred million


1000000000 = நிகர்புதம் - one billion


10000000000 = கும்பம் -ten billion


100000000000 = கணம் -hundred billion


1000000000000 = கற்பம் -one trillion


10000000000000 = நிகற்பம் -ten trillion


100000000000000 = பதுமம் -hundred trillion


1000000000000000 = சங்கம் -one zillion


10000000000000000 = வெல்லம் -ten zillion


100000000000000000 = அன்னியம் -hundred zillion


1000000000000000000 = அர்த்தம் -?


10000000000000000000 = பரார்த்தம் —?


100000000000000000000 = பூரியம் -?


1000000000000000000000 = முக்கோடி -?


10000000000000000000000 = மஹாயுகம் -?

எண்கள் தமிழில்

எண்கள் தமிழில்

௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)


தொடக்கத்தில் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில்(Positional System) எழுத பயன்படுத்தப் படவில்லை. 10, 100, 1000 ஆகியவற்றுக்கு தனித்தனி குறியீடுகள் இருப்பதைக்கொண்டு இதை அறியலாம். தமிழ் எண்கள் எழுத்தால் எழுதப்படும் எண்களை சுருக்குவதற்கான குறியீட்டு முறையாகவே(Abbreviational System) பயன்படுத்தப்பட்டது. பூஜ்யம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் தான் தமிழ் எண்கள் இடம் சார்ந்த முறையில் எழுதப்பட ஆரம்பித்தது.
உதாரணமாக, இரண்டாயிரத்து நானூற்றி ஐம்பத்தி மூன்று என்பது பழைய முறையின் படி, ௨௲௪௱௫௰௩ என எழுதப்பட்டது.
அதாவது,
இரண்டு-ஆயிரம்-நான்கு-நூறு-ஐந்து-பத்து-மூன்று

௨-௲-௪-௱-௫-௰-௩
தற்கால நவீன முறைப்படி, இவ்வெண் ௨௪௫௩ என எழுதப்படுகிறது .

படைகளின் அளவு

படைகளின் அளவு

1-பந்தி = 1-இரதம்(தேர்) : 1-ஆனை : 3-குதிரை : 5-காலாள்

3-பந்தி = 1-சேனாமுகம்
3-சேனாமுகம் = 1-குல்மம்
3-குல்மம் = 1-கணகம்
3-கணகம் = 1-வாகினி
3-வாகினி = 1-புலுதம்
3-புலுதம் = 1-சமுத்திரம்
3-சமுத்திரம் = 1-சமாக்கியம்
10-சமாக்கியம் = 1-அக்குரோணி
1-அக்குரோணி = 21870-இரதம், 21870-ஆனை, 65610-குதிரை, 109350-காலாள்

மஹாபாரதத்தில் (பாண்டவர்கள், கெளரவர்கள்) மொத்த சைனியமும் சேர்த்து 18 அக்குரோணி.

8 அக்குரோணி = ஏகம்;
8 ஏகம் = கோடி;
8 கோடி = சங்கம்;
8 சங்கம்= விந்தம்;
8 விந்தம் = குமுதம்;
8 குமுதம் = பதுமம்;
8 பதுமம் = நாடு;
8 நாடு = சமுத்திரம்;
8 சமுத்திரம் = வௌ்ளம்

இராமனோடு சென்ற வானர சேனையின் அளவு எழுபது வெள்ளம்.

64 கலைகள்

64 கலைகள்.


1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்

20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

பெரும்பொழுதுகள்

பெரும்பொழுதுகள்
ஒரு வருடத்தை ஆறு பெரும் பொழுதுகளாக பிரித்தனர். அவை,

1. இளவேனில் (சித்திரை, வைகாசி )

2. முதுவேனில் (ஆனி, ஆடி)

3. கார் (ஆவணி, புரட்டாதி)

4. கூதிர் (ஐப்பசி, கார்த்திகை)

5. முன்பனி ( மார்கழி, தை)

6. பின்பனி ( மாசி, பங்குனி)

சிறுபொழுதுகள்

1. வைகறை

2. காலை

3. நண்பகல்

4. ஏற்பாடு

5. மாலை

6. யாமம்

முப்பது கற்ப காலங்கள்

முப்பது கற்ப காலங்கள்

1.வாமதேவ கற்பம்
2.சுவதேவராக கற்பம்
3.நீல லோகித கற்பம்
4.ரந்தர கற்பம்
5.ரௌரவ கற்பம்
6.தேவ கற்பம்
7.விரக கிருஷ்ண கற்பம்
8.கந்தற்ப கற்பம்
9.சத்திய கற்பம்
10.ஈசான கற்பம்
11.தமம் கற்பம்
12.சாரஸ்வத கற்பம்
13.உதான கற்பம்
14.காருட கற்பம்
15.கௌரம கற்பம்
16 நரசிம்ம கற்பம்
17 சமான கற்பம்
18 ஆக்நேய கற்பம்
19 சோம கற்பம்
20. மானவ கற்பம்
21.தத்புருஷ கற்பம்
22. வைகுண்ட கற்பம்
23. லெச்சுமி கற்பம்
24. சாவித்திரி கற்பம்
25. கோரம் கற்பம்
26. வராக கற்பம்
27. வைராஜ கற்பம்
28. கௌரி கற்பம்
29. மகோத்வர கற்பம்
30 பிதிர் கற்பம்

நமக்கு இன்னொரு ஜென்மம் இருக்கிறது. அப்பொழுதும் நாம் பிறந்து அனைவரிடமும் அன்போடு இருப்போம்.

காலம்-தெறிப்பளவு

காலம் அளவுகள் - தெறிப்பளவு

2 கண்ணிமை - 1 நொடி
2 கை நொடி - 1 மாத்திரை
2 மாத்திரை - 1 குரு
2 குரு - 1 உயிர்
2 உயிர் - 1 சணிகம்
12 சணிகம் - 1 விநாடி
60 விநாடி - 1 நாழிகை
2 1/2 நாழிகை - 1 ஓரை
3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
15 நாள் - 1 பக்கம்
2 பக்கம் (30 நாள்) - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம்(12 மாதங்கள்) - 1 ஆண்டு
60 ஆண்டுகள் - 1 வட்டம்


காலம் அளவுகள் - தெறிப்பளவு-2

1 நாழிகை = 24 நிமிடம்
2.5 நாழிகை = 1 மணி
3.75 நாழிகை = 1 முகூர்த்தம்
7.5 நாழிகை = 1 ஜாமம்
8 ஜாமம் = 1 நாள்
7 நாள் = 1 வாரம்
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது / பருவம்
3 ருது / பருவம் = 1 அயனம்
2 அயனம் = 1 வருடம்


காலம் அளவுகள் - தெறிப்பளவு-3

1 நாள் = 60 நாழிகை = 24 மணி
1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
1 நாழிகை = 24 நிமிடங்கள்
1 நாழிகை = 60 விநாழிகை
1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்
1 விநாழிகை = 60 லிப்தம்
1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 60 விலிப்தம்
1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 60 பரா
1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 60 தத்பரா
1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்

யுகங்கள்-உகங்கள்

யுகங்கள்-உகங்கள்



1 கற்பம் = 1000 சதுர் யுகம்
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்
1000 சதுர் யுகம் = 4 யுகங்கள்
4 யுகங்கள் = 43,20,000 ஆண்டுகள்

1. கிரேதயுகம் (34,56,000 வருடங்கள்)
2. திரேதயுகம் (17,28,000 வருடங்கள்)
3. துவாபரயுகம் (8,64,000 வருடங்கள்)
4. கலியுகம் (4,32,000 வருடங்கள்)

இந்த நான்கு யுகங்கள் கொண்டது ஒரு மகாயுகம்.
71 மகாயுகம் கொண்டது ஒரு மனு.
14 மனு கொண்டது ஒரு கற்பம்.

1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டுகள் (சிலர் இதை 64 ஆண்டுகள் எனக்கொள்ளும் வழக்கமும் இருக்கிறது)
1 ஆண்டு 12 மாதங்கள்

(ஆங்கிலேய கணக்குப்படி முதலில் 10 மாதங்களே இருந்தன, பின்பு கணக்கு பிழையாகப்பட்டதால் இந்திய முறைப்படி 2 மாதங்கள் சேர்த்துக்கொண்டார்கள்.)




தமிழ் மாதங்கள்

மாதம் தமிழில்வேறு பெயர்கள்மொத்த நாட்கள்
சித்திரைமேடம் , மேழம்30 நாள்
வைகாசிஇடவம் , விடை31 நாள்
ஆனி
மிதுனம் , ஆடவை31 நாள்
ஆடிகற்கடகம் , கடகம்31 நாள்
ஆவணிசிங்கம் , மடங்கல்31 நாள்
புரட்டாசிகன்னி30 நாள்
ஐப்பசிதுலாம், துலை29 நாள்
கார்த்திகைவிருச்சிகம் , நளி
29 நாள்
மார்கழிதனுசு, சிலை29 நாள்
தைமகரம் , சுறவம்29 நாள்
மாசிகும்பம்29 நாள்
பங்குனிமீனம்30 நாள்



2012/03/14

ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக பயன்படுத்து​வதற்கு

இணைய உலகில் ஓன்லைன் தகவல் பரிமாற்றத்திற்கு சிறந்த தொடர்பாடல் ஊடகமாக காணப்படும் ஜிமெயிலை உங்கள் கணணியின் வன்தட்டாக(hard disk) பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் உங்கள் கணணியின் தகவல் சேமிப்பதற்கான வசதியை மேலும் 25MB வரை அதிகரிக்க முடியும்.

இதற்காக வசதியை Gmail Drive என்ற இலவச மென்பொருள் ஒன்று தருகின்றது. இதனைப் பயன்படுத்தி அமைக்கப்படும் மெய்நிகர்(virtual) வன்தட்டில் drag-drop முறை மூலம் தகவல்களை சேமிக்க முடியும். இச்சேவையை பெறுவதற்கு இணைய இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மெய்நிகர் வன்தட்டை உருவாக்குவதற்கான படிமுறைகள்:

1. இந்த தளத்திற்கு சென்று http://www.filehippo.com/download_gmail_drive/ Gmail Drive என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் நிறுவிக்கொள்ளவும்.

2. தற்போது உங்களது mycomputer பகுதியில் மேலதிகமாக ஒரு வன்தட்டின் உருவம் காணப்படும். அதில் Right click செய்து தோன்றும் மெனுவில் Login As என்பதனை தெரிவு செய்யவும்.

3. அதன் பின் தோன்றும் வின்டோவில் உங்களுக்குரிய பயனர் பெயர், கடவுச்சொல் என்பவற்றை கொடுத்து உள்நுளையவும்.
4. இப்போது குறித்த வன்தட்டை பயன்படுத்த முடியும். வன்தட்டை செயலிழக்க செய்வதற்கு அதன்மேல் Right click செய்து தோன்றும் மெனுவில் Log out என்பதை தெரிவு செய்யவும்.


தரவுகளை இழக்காது FAT32 கோப்புக்களி​லுருந்து NTFSற்கு மாற்றுவதற்​கு

கணினிகளைப் பயன்படுத்தும்போது அதில் பயன்படுத்தப்படும் கோப்புவகைகளைப்பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். இங்கு floppy disks, hard disk, optical disk போன்றவற்றில் தரவுகள் சேமிக்கப்படும்.

எனினும் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி இத்தரவுகள் சேமிக்கப்படும்போது பொதுவாக FAT32, NTFS போன்ற இரண்டுவகையான கோப்பு வகைகள் காணப்படுகின்றன.

எனவே தேவைக்கு ஏற்ப FAT32 கோப்புக்களிலுருந்து NTFS ற்கு மாற்றம் செய்துகொள்ள முடியும். இதன்போது சில சந்தர்ப்பங்களில் தரவுகளை இழக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம். எனவே தரவு இழப்பை தவிர்த்து FAT32 கோப்புக்களிலுருந்து NTFS ற்கு மாற்றுவதற்கு கீழ்வரும் முறைகளை பின்பற்றுக.

1. முதலில் மாற்றவேண்டிய கோப்புக்கள் உள்ள வன்றட்டின் பெயரை குறித்துக்கொள்க.
2. படத்தில் காட்டியவாறு CMD ஐ Run As Administratorல் செயற்படுத்தவும்.
3.தற்போது ஏதாவது கோளாறுகள் உள்ளனவா என “chkdsk G: /f “ கட்டளையை பயன்படுத்தவும்.(இங்கு G என்பது வன்றட்டின் பகுதியாகும்
4.தொடர்ந்து “Convert G: /FS:NTFS”எனும் கட்டளையை செயற்படுத்துக.
5.கோப்புக்ள் முற்றாக மாற்றப்பட்டதும் command promptல் Conversion Complete என்றவாறு தோன்றும். இதிலிருந்து உங்கள் கோப்புக்கள் FAT32 இலிருந்து NTFS ற்கு மாற்றப்பட்டுவிட்டது.