பாஸ்வர்ட் மறந்து போனால்..
விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் எட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லொக் ஓன் செய்து அதனை நீக்க முடியும் இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது? அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.
முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.
இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.
அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.
நல்ல விசயத்துக்கு பயன்படுத்துங்கள்.
2009/12/12
2009/08/11
மனவறையில் உறங்குகிறாள்
தொடர்புகளால்தொடர்ந்துவரும் பாசத்தைஇரத்தப்பாசம்பந்தபாசம்தொப்பூழ்கொடி உறவுஎன்றெல்லாம்எடுத்துரைப்பது ஏன்?பிரிக்கமுடியாதஉறவுகள் என்பதாலா?பிரிக்கமுடியாத பாசம் என்பதாலா?ஒன்றில் ஒன்றாய்கலந்துவிடுகிறதேகாதலெனும் பாசம்இது எவ்வகை?இவற்றை யெல்லாம் மீறிஎனக்குள் ஓரு பாசம்பழக்கதோசத்தால்பற்றிக்கொண்டது!உரிமையால் ஏற்பட்ட பாசமல்லபாசத்தால் ஏற்பட்டஉரிமை இது!அதனாலே என்னவோஅது பசுமையாகவே இருக்கிறது!பிறப்பின் பாசத்தையும்மிஞ்சி விட்டதோபழக்கத்தால் வந்த பாசம்!இருக்கலாம் சிலவேளை!ஏன் என்றால்இது எடுக்கும் எண்ணத்தில்இணையவில்லை!கொடுக்கும் எண்ணத்தில்இணைந்தவை!இரண்டு விளக்குகள்ஏற்றி விட்டதும்எதன் வெளிச்சம் எதுஎன்றுதெரிவதில்லை!இப்படி ஒரு அன்புஅவளுக்கும் எனக்கும்!கருவறைக் குழந்தைப்போல்என் மனவறையில்உறங்குகிறாள்அன்பெனும் உருவில்!பாசத்தால் ஏங்கும் எனக்குபார்த்தீபன் கொடுத்தகுழந்தை இது!
அவனை விட்டு என்னால் இருக்கமுடியாது கடைசிவரை...!!!
முதன் முதலாய் நீ என்னைப் பார்த்தபோது,பார்க்கவில்லை நான் உன்னை, வெட்கத்தில்.....!என்னிடம் நீ பேசிய போது பேசவில்லை நான்,தந்தியடித்தது என் நாக்கு.., தரவு ஏதுமின்றி....!என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு..,ரசித்துச் சொன்னாய்.. என் சமையலை.....!"ருசித்துச் சாப்பிட்டேன், உன் கைராசிக்குகுடுத்து வைச்சவன் யாரென்று......."!கள்ளச் சிரிப்போடு கை காட்டிச் சென்றாய்..சந்தோசப்பட்டேன் நான் சந்தேகத்துடன் காரணம் தெரியாமல்...!தொலை பேசியில் தினம் கதைத்து வணக்கம் சொன்னாய்,ரசித்தேன், ரசித்து குதித்தேன் துள்ளி.......!அர்த்தம் என்ன இதுக்கு என்றுதுடித்துக் கேட்டது என் இதயம்....!உன் வாழ்வின் உதயம் காணகேட்டுவிடு அவனிடம் அர்த்தத்தை....!தேடினேன் நாளொன்று... தேர்ந்தெடுத்தேன் தீபாவளியை,அழைத்தேன் அவனை, தேவன், தேவி கோயிலுக்கு...!தேவனின் கோவிலில் தேடினேன் அவனை....தேய்ந்தது என் மனம் காணவில்லை அவனை என்று...!தேவியின் கோவிலில் கண் மூடி வேண்டினேன் - என்தேவனைக் காட்டு இப்போதே... என் முன்னால்.....!கண் விழித்து பார்த்த போது, கையில் பூமாலை தந்துவீபூதியிட்டார் என் நெற்றியில், குருக்கள்....!தேவியின் சம்மதத்துடன், அவன் தர்சனமும்கிடைக்கும் என்றெண்ணி திரும்பினேன்.. கண்டேன் அவனை...!முருகனின் முன்னால் நின்றுஎன்னையே பார்த்துக்கொண்டிருந்தான்....!அவனது பார்வையை மறக்க முடியவில்லை எனக்கு...நினைவிருக்கு.. இப்பவும் அந்த ஐப்பசி இருபத்தொன்றை....!சாப்பிட நானழைத்து, அப்பாவும் நானும்அவன் கூட சாப்பிட்டது, இட்லியும் தோசையும்...!முடிந்ததும் எடுத்தான் போட்டோ.... எம்அனுமதியுடன் அப்பாவையும்.., என்னையும்.....!ஊர், பேர் விசாரித்து.., உறவுகள் விசாரித்து...,பலப்படுத்திக் கொண்டோம், எமது உறவினை.....
சந்தித்து பகிர்ந்து கொண்டோம்,எம் காதலை மென்மேலும்....!விதைத்து, முளைத்து, வளர்ந்து விருட்சமாகிஇருக்கிறது.. எம் காதல் ஒன்றரை வருடமாக...!அவனை விட்டு என்னால், இருக்க முடியாது,கடைசிவரை.................!!!!!!

2009/05/08
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்
செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
( தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?
( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்)
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!
பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?யோசிக்கனும்....!!
இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)
பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.
கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம்
T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.
உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

கையாலாகத தமிழனாக இருப்பதற்கு
கையாலாகத தமிழனாக இருப்பதற்கு வெட்கமும் வேதனையும் இருக்கிறது.. தவறை திருத்தி கொள்ள ஆசை படுகிறோம். எவ்வாறு என்று தெரியவில்லை?
தமிழீழம்
இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்றுஎட்டிப்பார்க்���ும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக்குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின்ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)
நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில்கையெழுத்தி இடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில்கடிதம் எழுதுகிறேனா?எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கியபோது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்கரைந்திருப்பீர்கள்......எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டுவரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் " மஸ்தானா,மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?
அம்மா, அப்பாவின்மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில்அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை,நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும்,சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட்அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப்பார்த்திருந்தீர்���ள்....அதனால் தான் எழுதவில்லை.........ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலைநாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம்மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது......அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும்திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.
ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களைஅனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு 20 இரங்கற்பாஅனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவதுகிடைக்கும��� அல்லவா?இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்குபயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும்வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள்.
கொஞ்சம்பாவமாவது குறையட்டும்.......மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின்பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள்எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலைவெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போதுநீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கானகுறுஞ்ச���ய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத்தொலைக்காட்சிகளில் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள்தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக்கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் "சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.
அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின்இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால்அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில்எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில்முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறைஅடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்றுபோவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து,எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும்..
ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்.......அப்போதெல்லாம��� எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின்,வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத்தோன்றவில்லை......எனக்கு....���மைதியாய் விடியும் பொழுதும்,அழகாய்க் கூவும் குயிலும்,தோகை விரிக்கும் மயிலும்,காதல் பேசும் கண்களும்,தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா ௨லகத் தமிழர்களே?
எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம்அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்துஎறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,உலகத் தமிழர்களே........ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின்விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்இருக்கிறது.
இப்படிக்கு,வலி கலந்த நம்பிக்கைகளுடன்,உங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து
என்றும் அன்புடன்

பரீட்சையில் BIT அடிக்கும்போது கவனிக்க வேண்டிய 20 விடயங்கள்
1. Bit அடிப்பதுக்கு தைரியம் ரொம்ப ரொம்ப அவசியம். தைரியமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள்
2. மிக மிக முக்கியம். கட்டாயம் (மறக்காமல்) பிட் ஐ கொண்டுபோகணும்………
3. பிட் இண்ட அளவு எவ்வளத்துக்கு சின்னதா இருக்குதோ அவ்வளவத்திக்கு நல்லது.....
4. பிட் ஐ வெள்ளை பேப்பரில் எழுவது நல்லது........
5. Bit ஐ பென்சிலால் எழுதாமல் இருப்பது நல்லது. மடிக்கும் போது அழிந்து போகச் சான்ஸ் உள்ளது…..
6. கடைசி நேரம் பிட் அடிப்பம் என்று இருப்பதை விட, முதலிலேயே பிட் அடிப்பது நல்லது……
7. பரீட்சை தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்னாலேயே செல்வதன் மூலம் பின் வருசையில் இடம் பிட்டிக்க முடியும்.
8. Bit ய் ஒழிச்சு வைக்க வேண்டிய இடங்களை முதலிலேயே தெரிவு செய்து வைக்கவும்.
9. உள்ளே சென்றவுடன் பிட் இ எடுத்து விடைத்தாள் புத்தகத்தினுள்ளே செருகவும். இது பிட் அடிக்க இலகுவாக இருக்கும்.
10. அதிக பிட் கொண்டு போனால், எது எங்கே வைச்சது என்ற குழப்பம் இருக்கலாம். அதற்காக இன்னொரு ஒற்றையில் என்னென்ன பிட் எங்கெங்கே இருக்கு என்பதை எழுதி பொக்கற்றினுள் வைத்துக்கொண்டு செல்லவும்.
11. பிட் கொண்டுவந்த விசயம் நண்பர்களுக்கு கூட தெரியாமல் விசயத்தை உங்களுக்குள்ளேயே வைத்திருங்கள். ஏன் என்டால், பரீட்சை எழுதும் போது,அவர்ளுக்கு ஏதாவது தெரியாமல் போனால், அவர்கள் உங்களை எதிர்பார்ப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு சொல்லிகுடுக்கேக, அங்கே உங்களுக்கே Bit அடிக்க முடியாமல் போயிடும். - :)
12. பிட் அடிக்கும் பொது நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பதை தவிர்க்கவும்.. சிலவேளை அதுவே உங்களுக்கு வினையகிடும்....
13. பிட் அட்டிகும்போது முழுசி முழுசி பார்க்க வேண்டாம். (சாதாரணமாக இருக்கவும்)
14. உங்களைச்சுத்தி எத்தனை பேர் இருக்கிறாங்கள்/ அவங்கள் நல்லவங்களா என்று முதலியே தெரிந்து வைப்பது நல்லது.... மாட்டிவிட்டப் பிறகு கோவப்படுவதை விட இது சிறந்தது.
15. புத்தகத்தில் ஒரு பக்கம் முழுதும் உபயோகமான Formulas உள்ளதென்றால், அதை 25% zoom down பண்ணி photocopy அடித்தால் சுலபம். இதன் பின்னாலும் எழுதலாம்.
16. Lectures Bit வைத்திருப்பவர்கள் தயவுசெய்து அவைகளை கொண்டுவந்து முன்னால் வையுங்கள் என்று பயமுறுத்தினாலும், அசரக்கூடாது. (அவர்கள் வந்து check பண்ணமாட்டார்கள்.)
17. பெண்கள் தங்களது காலில் Bit களை எழுதி வைக்கலாம். ஆண்கள் T-shirt போடுவதை தவிர்க்கவும். நீளக் கை சேட் அணியவும். Bit களை ஒழிச்சு வைப்பதும் கொண்டு செல்லவும், எடுத்து பார்க்கவும் இலகுவாக இருக்கும்.
18. எங்க வைக்கின்றோம் என்பது முக்கியமில்லை, எப்படி எடுக்கின்றோம் என்பது தான் முக்கியம். எடுப்பது இலகுவாக இருக்க வேண்டும்.
19. Bit அடிச்சு முடிய, Bit களை வைத்திருத்தல் கூடாது. ஜன்னலோரத்தில் இருந்தால் பிட் அடித்து முடிந்தவுடன் பிட்டை வெளியே எறிந்து விடவும். இது சுய பாதுகாப்பிற்காகவே.
20. Bit அடிப்பவர்களுக்கு ஆங்கில எழுத்தில் "A" ல் இருக்கக்கூடாது. (ஏனெனில், அவர்கள் தான் முன் வரிசையில் எப்போதும் அமர்வார்கள், அதனால் Bit அடிப்பது, கைக்கு எட்டினது, வாய்க்கு எட்டாத கதையா போகும்.)
என்றும் அன்புடன்
Ashok babu

Subscribe to:
Posts (Atom)