
2008/07/30
காதலே வருவாயா

2008/07/24
ஆதிகாலை தரிசனங்கள்கதிரவன்
கண் கசக்கிக்கண் விழித்துக்கொண்டதும் விடிந்து விட்டதாய் சேவல் கூறிடஆரவார ஒலியெழுப்பும்பறவைகள் காற்றில் மிதந்து வரும் கோயில் மணியோசை சலங்கை ஒலிகளோடுசெல்லும் மாட்டு வண்டித் தொடர்கள் ஜன்னல் வெளிகளால்வந்த தொடும் சுடாத ஆதவக் கதிர்கள் உறைந்த பனிகரைந்துருக முற்றத்து மாமரம் நாணத்தோடு முகம்சிவந்து சிரிக்கும்செம்பருத்திப் பூக்கள் வெண்மணல்மெத்தையில் தன்னைமறந்துறங்கும் நாய்க்குட்டி நீலநிற வானம் இடையிடையே போட்டிபோட்டோடும்மழை முகில்கள் மழைக்காகக் காத்துக்காத்து வறண்டு உடல்கிழிந்த வயல்கள் எப்போழுதும் போலவேவியர்வை சிந்திஉழும் விவசாயிகள் செம்மறி ஆடுகளின்பின்னால் ஞானம்பெறச்செல்லும் சிறுவர்கள் நாளைய எதிர்காலம்குறித்த நம்பிக்கையுடன் பாடசாலை செல்லும்மாணவ மாணவிகள் சீருடை அணிந்துசெல்லும் எமதுதேசத்தின் காவலர்கள் ஈரெட்டு ஆண்டுகள் கடந்து சென்ற போதினிலும்… அந்த அழகிய அதிகாலை என் மனதை விட்டு விலகவில்லை!
எனக்கும் சிறகுகள் முளைக்கும்

என் உள்ளத்தின் ஆழத்தில்உறங்கிக் கிடக்கின்றனபல கனவுகள்.உயிரின் அடி ஆழத்தில்ஏக்கம் என்னும் நதிபெருக்கெடுத்தோடுகின்றது.எதையோ தொலைத்து எதையோ தேடியபடிவீதிகளின் ஓரங்களில்விரைவுப் பயணங்கள்விதியின் விளையாட்டால்வீணாகும் என் வாழ்நாட்களைஎவரால் மீட்க முடியும்?வாழும் நாட்கள்தருகின்ற வலியையாரால் தாங்கமுடியும்?எப்பொழுதும் வானத்தை நோக்கியபடியேவாசம் செய்கின்றேன்என் சிறகுகள் உடைந்து போனாலும்நினைவுகள் ஏனோ உயரவே பறக்கின்றன.விழிகளைத் திறந்தபடிதான் தூங்குகின்றேன்விழி மூடும் பொழுதெல்லாம் விழித்திருக்கின்றேன்எனக்கும் சிறகுகள் முளைக்கும்என்ற நம்பிக்கையில்இன்னும் இறவாதபறவை நான்
Subscribe to:
Posts (Atom)