2008/11/30
உலகநாயகன் மகிந்தவின் ஐ.நா.உரை
என் வணக்கத்திற்குரிய உலக மக்களே….மான்புமிகு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களும், எப்போதும் அவரை கரித்துக்கொட்டும் வெனிசூலா ஜனாதிபதி ஷாவேசும், நான் ஆரத்தளுவி குசலம் விசாரித்த ஈரானிய ஜனாதிபதி மஹ்முத் அஹ்மடி நஜாத்தும் அமர்ந்திருக்கும் இந்த ஐக்கிய நாடுகள் சபை 63 ஆவது கூட்டத்தொடர் சரித்திர விழா மேடையில் நானும் பேச வாய்ப்பு கிடைத்த கதை பெரிய கதை…. உலகமே சம்பந்தப்பட்ட கதை…ஏன் இது ஒரு கேனைக்கதையும் கூட…சிறி லங்காவின் ஜனாதிபதி கேனைக்கதை சொல்கின்றானே! என்ற கேள்வி எழலாம்….இங்கு கொலுவீற்றிருக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த கதையின் ஒரு முக்கிய பாத்திரம்.அதனால் இந்த சர்தாஜியின் கதையும் சொல்லவேண்டியதாயிருக்கின்றது.எமது நாட்டிற்கு நிறைய சரித்திரக்கதைகள் உண்டு அதை சுருங்க சொல்வதென்றாலும் கி.மு. பலநூற்றாண்டுகள் வரை போகவேண்டும். சிங்கமும், மனிதப்பெண்ணும் உறவுகொண்டு பிறந்தவர்களே நாங்கள் என்ற மகாவம்சத்தையும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.அந்த நூற்றண்டு ஆபிரிக்க காடுகளில் மனிதர்களாகவே, மற்றய வேடுவர்கள் கணக்கெடுக்காத காரணத்தால்;, விஜயனும், அவனது தந்தையும் வேறு யாரும் தம்முடன் மோத முற்படாததனால் தம்முள் மோதிக்கொண்ட சிறந்த நூற்றாண்டு.விஜயன் என்பவன் தம்பவன்னி அடைந்தது காலத்தின் சூழ்ச்சியும் அல்ல…அங்கு ஏற்கனவே குடியிருந்த தமிழர்கள் குவேனி என்ற இயக்கர் குலமாக்கப்பட்டது எமது சூழ்ச்சியும் அல்ல.ஆதிக்குடிகள் அடிமைகள் ஆக்கப்பட்டகதைகள் அழிக்கப்பட்ட கதைகள் எமது நாட்டில் மட்டும் அல்ல ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. சரி…எம்மை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தினால் என்ன செவ்வது என்று தொலை நோக்கு கொண்டு சிந்தித்த படியாலேயே மகாவம்சம் என்ற அம்புலிமாமா கதையை நாம் ஆதாரமாக்கொண்டு இன்றும் வாதிட்டுவருகின்றோம்.சரி…சக நிகழ்வுகளுக்கு வருவோம்… நான் முன்பே குறிப்பட்டபடி மன்மோகன் சர்தாஜி… தமிழர்கள் வான்பலம் பெற்றுவிட்டனர் என நாம் அறிந்ததும் ஒடிச்சென்றது என்னமோ இவரிடம் தான்…ஆம் ராடர்….எங்கெங்கு விமானங்கள் உள்ளன, எப்போது அவைகள் மேலெழும், அவற்றுக்கு என்ன செய்யலாம் என கண்டறியும் என நம்பி இவரிடம் இருந்து அந்த அதிஉயர் தொழிநுட்ப சக்தியை பெற்றோம். விமானங்களை கண்காணிக்கும் இந்த சக்தியும் சரி, உலகையே படைத்தாக கூறும் சக்தியும் சரி காக்க வேண்டிய நேரத்தில் எங்களை காக்கவில்லை. உதாரணம் வவனியா மீதான வான் தாக்குதல்.சரி இவற்றுக்கும் நான் சொல்ல வந்த கதைக்கும் என்ன தொடர்பு? சக நிகழ்வகளின் கோர்வைதான் உலக சரித்திரம், மேற்கத்தையே சிந்தனையில் ஹயாஸ் தியறி என்று ஒன்று உண்டு. இந்த விஞ்ஞான தத்துவப்படி உலக நிகழ்வுகள் யாவும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுடையவை. சகநிகழ்வுகள்…ஒரு பட்டாம் பூச்சியின் இறக்கை படபடப்பில் தொடங்கும் அதிர்வுக்கும் ஒரு பூகம்பத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றது அந்த தத்துவம்.என்கதை ஒரு பூகம்பத்தில் தொடங்கி ஒரு பட்டாம்பூச்சியின் படபடப்பில் முடிந்தது. ஆம் ரணில் பேச்சுவார்த்தை என்று சொல்லி…விடுதலைப்புலிகளை முதுகில் குத்தி அழித்துவிடலாம் என நினைத்ததுக்கும் நான் ஜனாதிபதியாகியதன் தொடர்பையும் தான் சொல்கின்றேன்.இந்த எங்கள் நாட்டுக்கதையின் முக்கியமான அத்தியாயம் 2005 களில் தொடங்கியது. அன்று இங்கு கதைசொல்கின்ற நானே கதாநாயகன் ஆனேன் நானும் ஒரு வகையில் இலங்கை கண்ட விஜயன்தான்.ஹம்பாந்தோட்டையில் ராஜபக்ஸவின் இரண்டாவது மகானாக பிறந்து மனித உரிமை மீறல்களில் பி.எச்.டி பெற்று அண்ணா மற்றும் தம்பியரை முக்கிய பதவிகளில் அமர்த்தி யுத்தத்தின் மூலம் தினமும் டொலர்களை எண்ணும் விஜயன்.என்னைப்போல் பல டொலர் எண்ணும் பலர் எம் அமைச்சுக்களில் கூடி விளையாடிய செயல் வினையாக மாறத்தொடங்கியது சதாரணமக்களின் வயிற்றில் அடி என.1983 களில் ஏற்பட்ட எங்கள் பெரு எழுச்சியின் பிரகாரம் தமிழர்கள் சில அசௌகரிங்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கின்றார்கள். அந்த சம்பவத்தின் பின்னர் தமிழர்களிடமிருந்து எங்களை தற்பாதுகாத்துக்கொள்ள அவர்களை அழிக்கும் நடவடிக்கைகளில் நாம் மும்மரமாக இருக்கின்றோம்.அந்த வரிசையில் ஐந்தாவதாக வந்திருக்கும் நான் மகிந்த ராஜபக்ஸ…சிரந்தி கோல் மீ… டார்லிங்…. தமிழ்ஸ் கோல் மீ…. காட்டான்.உண்மையில் நான் தான் உலக நாயகன் என்று சொன்னாலும் அது மிகை ஆவதற்கில்லை. வன்னியில் இருந்து யூ.என் ஐ கெட்அவுட் சொல்லிவிட்டு, நேரே அதே யூ.என்னில் வந்து தில்லாக பேசுகின்றேனே….இறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.வாழ்க யூ.என்., வாழ்க சிங்கள, வாழிய யூ.என்னின் கொள்கைகள்….மேடையில் இருந்து மகிந்த அவரது வெள்ளை வேட்டியை தூக்கிக்கொண்டு இறங்ககின்றார்…..இந்தியப்பிரதமர் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு பல நடன மங்கைகளுடன் மகிந்தவை நோக்கி பாடுகின்றார்….."உலகமெங்கினும் உன்னை வெல்ல யாரு? உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது லங்கா….உலக நாயகனே…உலகநாயகனே…..- அமெரிக்காவில் இருந்து ரவிக்குமார்
புதிய கீதாசாரம்
எதை நீ படித்தாய்மறந்து போவதற்கு.............?
எதை நீ புரிந்துகொண்டாய்பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு..............?
என்று நீ ஒழுங்காக கல்லூரி வந்தாய்வருகை கணக்கு குறையாமல் இருப்பதற்கு...........?
எந்த ஃபிகரை நீ காதலித்தாயோஅவளிடமே நீ செருப்படி வாங்குவாய்............!எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோஅவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்.......!!
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோஅது நாளை மற்றொருவனுடையதாகிறது மற்றொரு நாள் அதுவேறொருவனுடையதாகிவிடு-கிறது..........................!!!!!!!!!!!!!!!!!!!!
இதுவே கல்லூரி நியதியும்ஃபிகர்களின் குணாம்சமும்.

இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சில
இக்கடிதத்தை படித்த பொழுது எனது விழியிலிருந்து என்னையும் அறியாமல் சில
கண்ணீர்த்துளிகள் பூமியில் விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர் 11 அன்றைக்கு,உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம்விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில் உள்ள தேசத்தில் நம்சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர் 11 நடந்து கொண்டிருப்பதை நாம்இன்று வரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும் காணாததுபோல் இருந்துகொண்டிருக்கிறோம். ஒரு சீக்கிய மாணவனின் மயிரை அறுத்ததற்காகவெகுண்டெழுந்த சீக்கிய இனம் எங்கே, உன் தொப்புள் கொடி உறவின் உயிரைஅறுத்த பின்னும் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நம் தமிழ் இனம்எங்கே!!!!!இப்படிக்கு,இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்றுஎட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக்குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின்ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)
நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே?
குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில்கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில்கடிதம் எழுதுகிறேனா?
எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கியபோது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்கரைந்திருப்பீர்கள்......
எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டுவரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் " மஸ்தானா,மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.
அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின்மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில்அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை,நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும்,சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......
அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட்அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப்பார்த்திருந்தீர்கள்....அதனால் தான் எழுதவில்லை.........
ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலைநாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம்மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும்திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.
ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களைஅனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?
இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பாஅனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவதுகிடைக்கும் அல்லவா?
இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்குபயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும்வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம்பாவமாவது குறையட்டும்.......மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின்பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள்எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,
குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலைவெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போதுநீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கானகுறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத்தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள்தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,
எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக்கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் "சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.
அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின்இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால்அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில்எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,தமிழர்களே?அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில்முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறைஅடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்றுபோவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.
முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து,எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும்.ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்.......
அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின்,வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத்தோன்றவில்லை.....எனக்கு....
அமைதியாய் விடியும் பொழுதும்,அழகாய்க் கூவும் குயிலும்,தோகை விரிக்கும் மயிலும்,காதல் பேசும் கண்களும்,தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,
இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத் தமிழர்களே?
எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம்அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்துஎறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,உலகத் தமிழர்களே........
ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின்விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்இருக்கிறது.
வலி கலந்த நம்பிக்கைகளுடன்,உங்கள் தொப்புள்கொடி உறவு, தமிழீழத்திலிருந்து

2008/09/16
பெருவெடிப்புச் சோதனை.
ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் எல்லைப்புறத்தின் அடியில், அணு உடைக்கும் கருவி ஒன்றைச்சுற்றி இரு திசைகளிலும், அணுக் கருத்துகள்களைக் கொண்ட கதிர்க்கற்றைகளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவியிருக்கிறார்கள். பிரபஞ்சம் உருவான விதம் குறித்து மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் முயற்சி தொடங்குவதைக் குறிக்கும் ஒன்றாக இந்த பரிசோதனை அமைகிறது.இந்த கற்றைகள் சில நேரம் சுழற்றிவிடப்பட்டு பின்னர் மோத வைக்கப்படும்போது, சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும்.இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், அதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் (பௌதீகவியலாளர்கள்) நம்புகிறார்கள். இந்த அணுத்துகள்களின் மோதல்கள் சூரியன் உட்பட அனைத்தையும், அனைத்து சக்திகளையும் அகத்துறிஞ்சிக்கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு கரும் சூனிய வலயத்தை உருவாக்கக்கூடும் என்றும் அதனால் உலகம் அழியக்கூடும் என்றும் சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.
கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்.(Big Bang)
கடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல் பரிசோதனையாக அமையவுள்ள இப்பரிசோதனையின் போது நேர் ஏற்றம் கொண்ட புரோத்தன் துணிக்கைகளாலான இரண்டு கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் உச்ச வேகத்தில் சுமார் 27 கிலோமீற்றர்கள் உள்ள நிலக்கீழ் வட்டப்பாதையில் மோதவிடப்பட உள்ளன. இந்த வட்டப் பாதை நெடுகினும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 க்கும் அதிகமான வளைய வடிவ மின் காந்தங்கள் மேற்குறிப்பிட்ட புரோத்தன் கற்றைகளை வட்டப் பாதையில் இயக்கவுள்ளன.இந்தப் பரிசோதனையின் போது ஒரு செக்கனுக்கு 11,000 தடவைகள் என்ற விகிதத்தில் புரோத்தன் கற்றைகள் மேற்குறிப்பிட்ட 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு ஒத்த உச்ச வேகத்தில் எதிர் எதிர் முனைகளில் பயணித்து மோதவுள்ளன.இந்த மொத்துகை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் வெப்பநிலைக்கு (கிட்டத்தட்ட -271 பாகை செல்சியஸ்)நிகர்ந்த வெப்பநிலையில் நடத்தப்படுவதோடு.. இந்த மொத்துகையினால் தோன்றும் சூழல் என்பது பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெரு வெடிப்புக்கு (Big Bang) பின்னான உடனடிச் சூழலை ஒத்ததாக இருக்கும் என்றும் நம்புகின்றனர்.இந்தப் பரிசோதனையில் இருந்து திணிவு என்றால் என்ன.. அந்தத் திணிவை ஆக்கும் அடிப்படை அலகு என்ன என்பதை அறியக் கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நாம் காணும் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் அவதானிப்புக்கள் கூறுகின்றன.இந்த நிலையில் செப்டம்பர் திங்கள் புதன்கிழமை(10-09-2008)காலையில் இருந்து நடைபெற ஆரம்பித்துள்ள இப்பரிசோதனையானது விண்ணியல் சார்ந்து மட்டுமன்றி அடிப்படை பெளதீகம், இப்பிரபஞ்சத்தினை ஆக்கியுள்ள அடிப்படை கூறுகள், இயற்கை பற்றிய அற்புதங்கள் சிலவற்றுக்கு விடை பகரலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சுறா மீனில் இருந்து புற்று நோய்க்கு மருந்து
சுறா மீனில் இருந்து புற்று நோய்க்கு மருந்து-புற்று நோய்க்கு புதுப்புது மருந்துகளை கண்டு பிடிக் கும் ஆராய்ச்சியில் ஆஸ்தி ரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஈடுபட்டனர்.இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு அவர்கள் சுறா மீன் களின் செல்களில் இருந்து புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடித்துள்ளனர். சுறாமீன் செல்களில் உள்ள மரபணுக்களை எடுத்து அவற்றுடன் சோதனை கூடத்தில் புரோட்டீன் களை சேர்த்து அவற்றை நோய் எதிர்ப்பு செல்களாக மாற்றினார்கள்
2008/07/30
காதலே வருவாயா
உனக்கு காக்க வைப்பதில் சுகமென்றால் எனக்கு காத்திருப்பதில்அதிக சுகம்உன் தூக்கம் கலைக்க விரும்பவில்லைஉன் தூக்கம் கலையும் வரை காத்திருக்கத்தான் விரும்பவில்லைகவிதைக்காய் காத்திருபதில் கவிதை பிறப்பதுஎனக்கு மட்டும்தான்காதலனாகத்தான் காத்திருக்கிறேன்கவிதையே காதல் கவிஞனாய் நீண்டநேரமாய் காத்திருந்தாலும்நீ கேட்டால் ஏன்தான் சில நேரமாய் என்றுபொய் சொல்லுகிறேனோஉனக்காய் காத்திருந்த இடத்தில்நான் காணாமல் போயிருந்தால்கவலைப்படாதே என் கால்களின் கவிதைகளையாவது விட்டுத்தான் போயிருப்பேன்
2008/07/24
ஆதிகாலை தரிசனங்கள்கதிரவன்
கண் கசக்கிக்கண் விழித்துக்கொண்டதும் விடிந்து விட்டதாய் சேவல் கூறிடஆரவார ஒலியெழுப்பும்பறவைகள் காற்றில் மிதந்து வரும் கோயில் மணியோசை சலங்கை ஒலிகளோடுசெல்லும் மாட்டு வண்டித் தொடர்கள் ஜன்னல் வெளிகளால்வந்த தொடும் சுடாத ஆதவக் கதிர்கள் உறைந்த பனிகரைந்துருக முற்றத்து மாமரம் நாணத்தோடு முகம்சிவந்து சிரிக்கும்செம்பருத்திப் பூக்கள் வெண்மணல்மெத்தையில் தன்னைமறந்துறங்கும் நாய்க்குட்டி நீலநிற வானம் இடையிடையே போட்டிபோட்டோடும்மழை முகில்கள் மழைக்காகக் காத்துக்காத்து வறண்டு உடல்கிழிந்த வயல்கள் எப்போழுதும் போலவேவியர்வை சிந்திஉழும் விவசாயிகள் செம்மறி ஆடுகளின்பின்னால் ஞானம்பெறச்செல்லும் சிறுவர்கள் நாளைய எதிர்காலம்குறித்த நம்பிக்கையுடன் பாடசாலை செல்லும்மாணவ மாணவிகள் சீருடை அணிந்துசெல்லும் எமதுதேசத்தின் காவலர்கள் ஈரெட்டு ஆண்டுகள் கடந்து சென்ற போதினிலும்… அந்த அழகிய அதிகாலை என் மனதை விட்டு விலகவில்லை!
எனக்கும் சிறகுகள் முளைக்கும்
என் உள்ளத்தின் ஆழத்தில்உறங்கிக் கிடக்கின்றனபல கனவுகள்.உயிரின் அடி ஆழத்தில்ஏக்கம் என்னும் நதிபெருக்கெடுத்தோடுகின்றது.எதையோ தொலைத்து எதையோ தேடியபடிவீதிகளின் ஓரங்களில்விரைவுப் பயணங்கள்விதியின் விளையாட்டால்வீணாகும் என் வாழ்நாட்களைஎவரால் மீட்க முடியும்?வாழும் நாட்கள்தருகின்ற வலியையாரால் தாங்கமுடியும்?எப்பொழுதும் வானத்தை நோக்கியபடியேவாசம் செய்கின்றேன்என் சிறகுகள் உடைந்து போனாலும்நினைவுகள் ஏனோ உயரவே பறக்கின்றன.விழிகளைத் திறந்தபடிதான் தூங்குகின்றேன்விழி மூடும் பொழுதெல்லாம் விழித்திருக்கின்றேன்எனக்கும் சிறகுகள் முளைக்கும்என்ற நம்பிக்கையில்இன்னும் இறவாதபறவை நான்
Subscribe to:
Posts (Atom)